பொன்னியின் செல்வன் – 2 படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வுகளில் அப்படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகைகள் பங்கேற்று வருகின்றனர்.
படத்தின் மையக்கதை தஞ்சாவூர், சோழர்கள் பற்றியது. ஆனால் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வுகளை சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் நகரங்களில் நடத்தும் படக்குழு இதுவரை தஞ்சாவூர் பக்கம் செல்லவில்லை.
இதற்கு காரணம் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சென்று வந்தால் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரம் பறிபோகும், ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஆட்சி கைவிட்டு போகும் என காலங்காலமாக கதை சொல்லப்பட்டு வருகிறது.
இதன் காரணமாகவே தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் சம்பந்தமான விழாக்களில் அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் பங்கேற்பதை புறக்கணித்துவிடுவார்கள்.
அதே போன்ற சென்டிமெண்ட் கருதி பொன்னியின் செல்வன் படக்குழுவினர் தஞ்சாவூர் பக்கம் போகாமல் தவிர்த்து வருகின்றனரா என்ற விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த பொன்னியின் செல்வன் படக்குழுவினரிடம்
“சோழர்களைப் பற்றி படம் எடுத்து விட்டு தஞ்சாவூர் பக்கமே போகாதது ஏன்”?. என கேள்வி எழுப்பபட்டது. இதற்கு நடிகர் கார்த்தி பதிலளித்தார்
“முதல் பாகத்தின் டீசர் லாஞ்சே அங்கு இருந்து தான் ஆரம்பிக்க வேண்டியது. அப்போதான் கொரோனா மூன்றாவது அலை பரவ ஆரம்பித்துள்ளதாக கூறப்பட்டது. அதனால் கலெக்டர் ரிஸ்க் வேண்டாம்னு சொல்லி அனுமதி அளிக்கவில்லை.
தஞ்சாவூர் கோவில் பக்கத்துல அந்த விழா நடைபெற இருந்தது. அதற்கு அனுமதி கிடைக்காததால் பின்னர் சென்னையில் இருந்து ஆரம்பித்துவிடலாம் என முடிவெடுத்து அப்படியே போயிட்டோம்.

இந்தமுறை திரும்ப அதற்கான முயற்சியை எடுப்போம். எங்களுக்கு தஞ்சாவூர் போகனும்னு ஆசை இருக்கு. கண்டிப்பா போவோம்” என கூறினார்.
ஆனால் இந்த முறை பொன்னியின் செல்வன் 2 படக்குழு வெளியிட்ட விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி பட்டியலில் தஞ்சாவூர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இராமானுஜம்
1500 பேருந்துகள் நிறுத்தம்: கட்கரியிடம் எஸ்.எஸ்.சிவசங்கர் கோரிக்கை!
சித்த பல்கலை மசோதா: இரண்டாம் முறையும் திருப்பி அனுப்பிய ஆளுநர்

Comments are closed.