பொன்னேரி தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ யார்?

By Mathi

|

Published on 13 Apr 2026, 9:26 AM

Ponneri

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

 மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் பொன்னேரி சட்டசபை தொகுதியை கைப்பற்றப் போவது யார்? என பார்க்கலாம்

வாக்காளர்கள்

ADVERTISEMENT

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

சாதி வாரியான வாக்காளர்கள்

2021 சட்டசபை தேர்தல் முடிவு

2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவு

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

பொன்னேரி தனித் தொகுதி.. 2021-ல் காங்கிரஸின் துரை சந்திரசேகரன் ஜெயிச்சிருந்தாரு.. 2016-ல் அதிமுகவின் பலராமன் ஜெயிச்சிருந்தாரு. இந்த முறை சிட்டிங் எம்.எல்.ஏ.வான துரை சந்திரசேகரனே காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் போட்டியிடுகிறார்.. அதிமுக வேட்பாளராக போன முறை தோல்வி அடைந்த முன்னாள் எம்.எல்.ஏ. பலராமன் மீண்டும் போட்டியிடுகிறார்.. இதனால இந்த தொகுதியின் கள நிலவரம் எதிர்பார்ப்புக்குரியதாக இருக்கிறது. தற்போதைய கள நிலவரம் எப்படி இருக்கிறது? போன டைம் 9,689 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிச்ச காங்கிரஸ் துரை சந்திரசேகரன் இந்த முறை எளிதாக வெல்வார் என்கிறது கள நிலவரம்.

நமது சர்வே முடிவுபடி, 

திமுக கூட்டணி- 42%
அதிமுக கூட்டணி – 30%
தவெக- 20%
நாதக- 7 % வாக்குகள் பெறும்

துரை சந்திரசேகரன் இங்கே எளிதாக வெற்றி பெறுவார் என கள நிலவரம் கூறுகிறது.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? திருவள்ளூர் | Thiruvallur | Minnambalam Mega Survey Results 2026

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel