பொன்முடி தீர்ப்பு: முதலமைச்சர் ரியாக்‌ஷன் என்ன?

By Aara

|

Published on 20 Dec 2023, 4:10 PM

Ponmudi verdict Chief Minister's reaction

Ponmudi verdict Chief Minister’s reaction

டிசம்பர் 19ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என்று சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

ADVERTISEMENT

இவர்களுக்கான தண்டனையை டிசம்பர் 21ஆம் தேதி அறிவிப்பதாக நீதிபதி ஜெயச்சந்திரன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த தீர்ப்பு வெளிவந்தபோது முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இருந்திருக்கிறார்.

ADVERTISEMENT

சில நிமிடங்களில் அமைச்சர் பொன்முடி வழக்கின் தீர்ப்பு விவரம் முதல்வருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை கேட்டதும் கடுமையாக அதிர்ச்சி அடைந்திருக்கிறார் முதல்வர்.

தமிழ்நாடு இல்லத்தில் தன்னோடு இருந்த திமுகவின் சீனியர் டெல்லி பிரமுகர்களிடம், ‘இப்படி ஒரு தீர்ப்பை எதிர்பார்க்கவே இல்லையே.

ADVERTISEMENT

இப்படி வரும்னு என்கிட்ட யாரும் சொல்லவே இல்லையே?” என்று தன்னுடைய முதல் ரியாக்‌ஷனை வெளிப்படுத்தியிருக்கிறார்.

உடனடியாக இந்த விவகாரத்தில் அடுத்து சட்ட ரீதியாக என்ன செய்ய வேண்டும் என்பதை கவனிக்குமாறு திமுகவின் சட்டத்துறை பிரமுகர்களிடம் அறிவுறுத்தச் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.

கடந்த நவம்பர் 27ஆம் தேதி இந்த வழக்கு விசாரணை முடிந்து எழுத்துப்பூர்வமான வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து முதலமைச்சரிடம் திமுகவின் சீனியர் வழக்கறிஞர்கள் சில விஷயங்களை தெரிவித்திருக்கிறார்கள்.

”இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஜெயச்சந்திரன் ஹானஸ்ட் ஜட்ஜ் என்று பெயர் எடுத்தவர். எந்த அழுத்தத்துக்கும் ஆட்படாதவர் என்ற பெயர் பெற்றவர்.

மேலும் இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தெளிவாக இருக்கிறது. எனவே பொன்முடி உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படுவதற்கே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. தீர்ப்பு நமக்கு சாதகமாகதான் வரும்’ என்று முதல்வரிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த பின்னணியில்தான் நேற்றைய தீர்ப்பு வந்ததும் முதலமைச்சர் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

–வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பொதுத்தேர்வு தேதி மாற்றமா?: அமைச்சர் விளக்கம்!

மிமிக்ரி சர்ச்சையில் சாதி சர்ச்சையை கிளப்பிய ஜெகதீப் தங்கார்

நெல்லை, தூத்துக்குடி ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Ponmudi verdict Chief Minister’s reaction

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Aara

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel