விழுப்புரம் திமுக செயற்குழு கூட்டம்… பொன்முடி புறக்கணிப்பு!

Published On:

| By Selvam

விழுப்புரம் திமுக செயற்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் பெயர், புகைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக மூத்த நிர்வாகிகளுள் ஒருவரான பொன்முடி, விழுப்புரத்தின் திமுக முகமாக அறியப்படுபவர். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் குறித்தும் சைவம், வைணவம் குறித்தும் பொன்முடி ஆபாசமாக பேசியது சர்ச்சையானது. இதனையடுத்து திமுகவில் அவரது துணை பொதுச்செயலாளர் பதவியும், அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது.

ADVERTISEMENT

சமீபத்தில் 8 மண்டலங்களுக்கு திமுகவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதிலும் பொன்முடியின் பெயர் இடம்பெறவில்லை. பொன்முடியின் சொந்த மாவட்டமான விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில், விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. Ponmudi photos boycott in villupuram dmk

ADVERTISEMENT

இதனையொட்டி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தை வரவேற்கும் விதமாக கலைஞர் அறிவாலயம் முன்பாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன், அமைச்சர் எம்.ஆர்.கே படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது. பொன்முடியின் படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் கலைஞர் அறிவாலயமானது லட்சுமணன் பொறுப்பாளராக இருக்கும் தொகுதிக்குள் வருகிறது. இருப்பினும் திமுகவில் மிகவும் சீனியரான பொன்முடியின் படங்கள் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளது அம்மாவட்ட திமுகவினருக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

பொன்முடியின் மகன் கெளதம சிகாமணி மாவட்ட செயலாளராக இருக்கும் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று (மே 22) எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் பொன்முடியின் படங்கள் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. Ponmudi photos boycott in villupuram dmk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share