ADVERTISEMENT

பொன்முடியின் ஆபாச பேச்சு : வழக்குப்பதிவு செய்ய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு!

Published On:

| By Kavi

is ponmudy minister post in danger after HC attack

அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Ponmudi obscene speech Judge Anand Venkatesh order

வனத்துறை அமைச்சர் பொன்முடி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது பெண்கள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசியிருந்தார்.

ADVERTISEMENT

இந்தநிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 17) அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிக்கு வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமைச்சர் பொன்முடி பேசிய பேச்சை திரையிடச் செய்தார். தொடர்ந்து, “இந்தப் பேச்சு முழுக்க முழுக்க துரதிஷ்டவசமானது. அமைச்சர் பொறுப்பை வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா?” என்று கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் காவல்துறை தரப்பில் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க கோரி 5 புகார்கள் வந்துள்ளது. விசாரணை நடத்தி எப்.ஐ.ஆர் போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர் பொன்முடியின் வெறுப்பு பேச்சுக்கு புகார் இல்லாமலேயே வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும். வழக்குப்பதிவு செய்யாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை பாயும்” என்று உத்தரவிட்டார். Ponmudi obscene speech Judge Anand Venkatesh order

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share