அமலாக்கத் துறை வழக்கு : பொன்முடிக்கு விலக்கு!

Published On:

| By Kavi

Ponmudi exempted from appearing in ed pmla case

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. Ponmudi exempted from appearing in ed pmla case

2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் உயர் கல்வி மற்றும் கனிம வளங்கள் சுரங்கத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார்.

ADVERTISEMENT

அப்போது அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவு செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம் தமிழக அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. 

இந்த வழக்கில் அமலாக்கத் துறையும் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. 

ADVERTISEMENT

இந்த வழக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பொன்முடி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓம் பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது  பொன்முடி சார்பில், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாகவும் திமுக செயற்குழு உறுப்பினராகவும் உள்ளதால் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான பணிகள் தனக்கு வழங்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இதையும் தனது வயதையும் கருத்தில் கொண்டு விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. 

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி இன்று பிறப்பித்த உத்தரவில், பொன்முடி வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்துள்ளார். 

மேலும் குற்றச்சாட்டு பதிவு உள்ளிட்ட நடைமுறைகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டால் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். Ponmudi exempted from appearing in ed pmla case

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share