அமைச்சர் பொன்முடியின் ரூ.41.9 கோடி சொத்துக்கள் பறிமுதல்?

Published On:

| By Selvam

ponmudi 41 crore asset abduct

2006-11 கால கட்டத்தில்  கனிம வளத்துறை அமைச்சராக இருந்த தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அளவுக்கு அதிகமாக செம்மண் குவாரிகளில் மணல் அள்ள அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அரசுக்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதம சிகாமணி மீது விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் 2012-ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தசூழலில் அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை அதிகாரிகளால் விசாரணைக்காக நேற்று இரவு 8.30 மணிக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தசூழலில் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.41.9 கோடி வைப்புத்தொகை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், மேலும் அவரது வீட்டில் ரூ.70 லட்சம் ரொக்கம், பொன்முடி மகன் கெளதம சிகாமணிக்கு சொந்தமான இரண்டு சொகுசு கார்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கெளதம சிகாமணி வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளது குறித்தும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்வம்

பொன்முடி விடுதலை?

விழுப்புரம் பொன்முடி இல்லத்தில் ED சோதனை நிறைவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share