தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக, தெற்கு ரயில்வே சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளது.
வரும் ஜனவரி 14ஆம் தேதி போகி பண்டிகை தொடங்கி, 15 சூரியன் பொங்கல், 16 மாட்டு பொங்கல், 17 காணும் பொங்கல் கொண்டாடப்படவுள்ளது. தமிழர்களின் திருவிழாவை முன்னிட்டு வெளியூரில் வசிப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
இந்தநிலையில் பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. சுமார் 150 ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
சென்னை, கோயம்புத்தூர், மதுரை,திருநெல்வேலி உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கு இந்த கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
நாகர்கோவில் டூ தாம்பரம் -வண்டி எண் – 06012
வரும் 11 மற்றும் 18 ஆகிய தேதிகளில்நாகர்கோவிலில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.
தாம்பரம் டூ நாகர்கோயில் -வண்டி எண்; 06011
வரும் 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில்தாம்பரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 3.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
கன்னியாகுமரி டூ தாம்பரம் வண்டி எண்; 06054
வரும் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
தாம்பரம் டூ கன்னியாகுமரி -வண்டி எண்; 06053
வரும் 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 3.30 மணிக்கு கன்னியாகுமரி வந்துசேரும்.
திருநெல்வேலி டூ செங்கல்பட்டு – வண்டி எண்; 06156
வரும் 09 மற்றும் 16 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் மதியம் 01.15 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும்.
செங்கல்பட்டு டூ திருநெல்வேலி – வண்டி எண்; 06055
வரும் 09 மற்றும் 16 ஆகிய தேதிகளில்செங்கல்பட்டில் இருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 2 மணிக்கு திருநெல்வேலி வந்துசேரும்.
திருநெல்வேலி டூ செங்கல்பட்டு வண்டி எண்; 06158
வரும் 10 மற்றும் 17 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் மதியம் 01.15 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும்.
செங்கல்பட்டு டூ திருநெல்வேலி – வண்டி எண்; 06057
வரும்10 மற்றும் 17 ஆகிய தேதிகளில்செங்கல்பட்டில் இருந்து மதியம் 5 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 3 மணிக்கு திருநெல்வேலி வந்துசேரும்.
கோவை டூ சென்னை – செண்ட்ரல் வண்டி எண்; 06034
வரும் 11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூரில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 9.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.
செண்ட்ரல் டூ கோவை – வண்டி எண்; 06033
வரும் 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 9 மணிக்கு கோயம்புத்தூர் வந்துசேரும்.
போத்தனூர் டூ சென்னை சென்ட்ரல் – வண்டி எண்; 06024
வரும் 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில்போத்தனூரில் இருந்து நள்ளிரவு 12.35 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் காலை 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.
சென்னை செண்ட்ரல் டூ போத்தனூர் – வண்டி எண்; 06023
வரும்14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 1.50 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் இரவு 11.15 மணிக்கு போத்தனூர் வந்துசேரும்.
திருநெல்வேலி டூ சென்னை எழும்பூர் வண்டி எண்; 06070
வரும் 08 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.
சென்னை எழும்பூர் டூ திருநெல்வேலி – வண்டி எண்; 06069
வருகிற 09 ம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் இரவு 11.30 மணிக்கு சென்னை திருநெல்வேலி வந்து சேரும்.
ஈரோடு டூ செங்கோட்டை – வண்டி எண்; 06025
வரும் 13ஆம் தேதி ஈரோட்டில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் 11.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.
செங்கோட்டை டூ போத்தனூர் – வண்டி எண்; 06026
வரும் 14ம் தேதிசெங்கோட்டையில் இருந்து இரவு 8.45 மணிக்கு போத்தனூர் புறப்படும்.
ராமேஸ்வரம் டூ தாம்பரம் – வண்டி எண்; 06106
வரும் 13 மற்றும் 20 ஆம் தேதிகளில் ராமேஸ்வரத்தில் இருந்து இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
தாம்பரம் டூ ராமேஸ்வரம் – வண்டி எண்; 06105
வரும் 14 மற்றும் 21 ஆம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 3.30 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும்.
மங்களூரு டூ செண்ட்ரல் – வண்டி எண்; 06125
வரும் 13ஆம் தேதி மங்களூரில் இருந்து அதிகாலை 3.10 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் இரவு 11.30 மணிக்கு சென்னை சென்னை சென்ட்ரல் சென்றடையும்
சென்னை சென்ட்ரல் டூ மங்களூரு – வண்டி எண்; 06105
வரும் 14ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 4.15 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் இரவு 11.30 மணிக்கு மங்களூரு வந்து சேரும்.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (ஜனவரி 4) தொடங்குகிறது.
