புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் பொங்கல் தொகுப்பு அறிவிப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

Pongal package for all ration cards in Puducherry

புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் ரூ.750 மதிப்பிலான பொங்கல் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய், பருப்பு ஆகியவை பொங்கல் தொகுப்பில் இடம் பெறும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

முன்னதாக கரூர் சம்பவம் நடந்து 72 நாட்களான நிலையில் நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் புதுச்சேரியில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இந்திய அளவில் ரேஷன் கடைகளே இல்லாத மாநிலம் புதுச்சேரி. ஏழை எளிய மக்களுக்கு வாழ்வாதாரமே ரேஷன் கடைகள்தான். மற்ற மாநிலங்களில் இருப்பதை போல் இங்கேயும், அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, எண்ணெய் என்று அனைத்து பொருட்களும் வழங்கும் முறை சீராக்கப்பட வேண்டும் என பேசினார்.

விஜய்யின் இந்த பேச்சு நேற்று அம்மாநில அரசியலில் பேசுபொருளாகி உள்ள நிலையில் இன்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share