பொங்கல்: 34 சிறப்பு ரயில்களில் இன்று முன்பதிவு தொடக்கம்

Published On:

| By Mathi

Spl trains

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே அறிவித்த 34 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (ஜனவரி 4) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் வரும் 11-ந் தேதி முதல் இயக்கப்பட உள்ளன.

ADVERTISEMENT

சென்னை எழும்பூர், சென்ட்ரல் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மொத்தம் 20 வழித்தடங்களில் 34 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்தது.

இந்த 34 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று ஜனவரி 4-ந் தேதி காலை தொடங்குகிறது.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share