வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக அரசு பேருந்துகளில் இன்று (டிசம்பர் 13) முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்க உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
வரும் ஜனவரி மாதத்தில் போகி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், உழவர் திருநாள் என அடுத்தடுத்து வரும் நான்கு நாட்கள் விடுமுறைக்கு இன்னும் 30 நாட்களே உள்ளன.
தமிழர்களின் திருவிழாவான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தற்போது முதலே தங்களது சொந்த ஊருக்கு செல்ல பொதுமக்கள் திட்டமிட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் தற்போது பொங்கல் விடுமுறைக்காக தங்களது சொந்த ஊருக்கு செல்வோர் அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு இன்று முதல் துவங்கி உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஏற்கெனவே 12ஆம் தேதி வரை முன்பதிவு திறக்கப்பட்டுள்ள நிலையில்,போகி பண்டிகை கொண்டாடப்படும் ஜனவரி 13-ம் தேதி அன்று சொந்த ஊர் செல்லும் பயணிகள் நேரிலும், TNSTC வலைதளம் அல்லது செயலி வாயிலாக இன்று டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று என்று போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஹீரோ அவதாரமெடுக்கும் RJ விஜய்… ஹீரோயின் யார் தெரியுமா?
விராட் கோலியின் சாதனையை சமன் செய்த சூர்யகுமார் யாதவ்