புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ரூ.11 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய, வரையறை செய்து கோப்பு அனுப்பிய நிலையில், ரூ.10,696 கோடி பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள பட்ஜெட்டின் மதிப்பு கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.280 கோடி அதிகமாகும்.
கடந்த 10-ம் தேதி தொடங்கிய புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தொடர் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்காததால், காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.