கேக் வெட்டி கொண்டாடிய பொல்லாதவன் குழுவினர்!

Published On:

| By Prakash

சினிமாவில் படத்தை தொடங்கி வெளியிடுவதற்குள் முன்னணி கதாநாயகர்கள் படங்கள் என்றால் மோஷன் சுவரொட்டி, முதல் பார்வை, டிரெய்லர், டீசர், பாடல் புரமோ, லிரிக்கல் வீடியோ, ஸ்னீக் பீக், என படம் வெளியாவதற்குள் ஏகப்பட்ட அறிவிப்புகளை கொடுத்து படத்தை மறந்துவிடாத வகையில் பில்டப்க்கள் வந்துகொண்டே இருக்கும்.

இப்படிப்பட்ட எந்த பில்டப்பும் கொடுக்க முடியாத காலத்தில் 15 வருடங்களுக்கு முன்பு வெளியான படம் பொல்லாதவன். தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்குனராக அறிமுகமான இந்தப் படத்தில் திவ்யா ஸ்பந்தனா@குத்து ரம்யா நாயகியாக நடித்திருந்தார்.

ADVERTISEMENT

சந்தானம், கருணாஸ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் பொல்லாதவன் படம் வெளியாகி நேற்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்தது. ஒரு படம் வெளியாகி ஒரு வருடம் முடிந்துவிட்டாலே சமூக வலைத்தளங்களிலும், வாட்ஸ் அப் குழுக்களிலும் விழா கொண்டாடி விடுகின்றனர்.

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக தான் இயக்கும் படங்களின் வெற்றியை உறுதிப்படுத்தி வரும் வெற்றிமாறன் இயக்குநராக அறிமுகமான படம் பொல்லாதவன் படத்தைவிட்டு வைப்பார்களா? இதை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் படக்குழுவினர் அனைவரும் ஒன்று திரண்டு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ், திவ்யா ஸ்பந்தனா, இயக்குனர் வெற்றிமாறன், ஜிவி பிரகாஷ் குமார், டேனியல் பாலாஜி, தயாரிப்பாளர் கதிரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் நடிகை திவ்யா ஸ்பந்தனா இந்த புகைப்படங்களை வெளியிட்டு, ”15 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. மேலும் ‛பொல்லாதவன் 2′ படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இராமானுஜம்

பாடகி டூ கதாநாயகி: அடுத்த களத்தில் ராஜலட்சுமி செந்தில்

ரூ. 10 கோடி: சமாதானமான வாத்தி தனுஷ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share