பொள்ளாச்சியில் பயங்கரம் : காதலியை கத்தியால் குத்தி கொன்ற காதலன்!

Published On:

| By vanangamudi

pollachi crime lover stabbed his girlfriend

பொள்ளாச்சியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அவரை காதலித்த இளைஞர் குத்தி கொலை செய்தது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. pollachi crime lover stabbed his girlfriend

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, தளக்கரை கிராமம் பொன்முத்து நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் அஸ்விதா. வயது 19.

ADVERTISEMENT

இன்று காலை வீட்டில் தனியாக இருந்த போது அஸ்விதா கத்தி கதறிய சத்தம் அக்கம் பக்கத்தினருக்கு கேட்டிருக்கிறது. இதனால் அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்தார் அஸ்விகாவை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.

ADVERTISEMENT

என்ன நடந்தது?

பொள்ளாச்சி, அண்ணாமலை நகர், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் பின்புறம், உடுமலைப்பேட்டை சாலை பகுதியில் வசித்து வருபவர் ராஜா. இவரது மகன் பிரவீன் குமார். வயது 25.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பக்கத்து பக்கத்து வீட்டில் வசித்துள்ளனர். அப்போது அஸ்விதாவுக்கும் பிரவீன் குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளது. இருவரும் வீட்டில் பேசி திருமணம் செய்துகொள்ளவிருந்தனர்.

ADVERTISEMENT

இந்தசூழலில் இன்று (ஜூன் 2) அஸ்விதாவின் பெற்றோர் பணிக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை தெரிந்துகொண்ட பிரவீன் குமார், காலை 10 மணிக்கு வீடு புகுந்து அஸ்விதாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.

முதலில் கழுத்து பகுதியில் குத்தியுள்ளார். அப்போது, என்னை விட்டுவிடு என்று அஸ்விதா கெஞ்சியும் விடாமல் சுமார் 30 நிமிடங்கள் அஸ்விதாவிடம் சண்டை போட்டு தலை, கை, கால் என 15 இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதனால்அஸ்விதா ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த போதும் பிரவீன் குமார் விடவில்லை. ஆத்திரம் தீராமல் தரையில் கிடந்தவரை மீண்டும் மீண்டும் குத்திவிட்டு தப்பியுள்ளார்.

இந்தநிலையில் தான் அக்கம்பக்கத்தினர் வந்து அஸ்விதாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த ஏஎஸ்பி சிருஷ்டி சிங் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார். தொடர்ந்து போலீசார் பிரவீன் குமாரை தேடி வந்த நிலையில், அவரே பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

அவரிடம் போலீசார் விசாரித்த போது, சமீபத்தில் அஸ்விதாவுக்கும் பிரபாகரன் என்ற நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது பிரவீன் குமாருக்கு தெரியவந்து, பிரபாகரனிடம் பேசாதே என அஸ்விதாவை கண்டித்திருக்கிறார்.

இருந்தும் தொடர்ந்து அஸ்விதா பிரபாகரனிடம் பேசி வந்ததால், அது பிடிக்காமல் இப்படி செய்துவிட்டேன் என்று பிரவீன் குமார் கூறியிருக்கிறார். pollachi crime lover stabbed his girlfriend

அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share