sஏன் அதிக நூல்களைப் படிக்க வேண்டும்?: டிஜிபி

Published On:

| By admin

து உண்மை, எது பொய் என்பதை அறிந்துகொள்வதற்கு அதிக நூல்களைப் படிப்பது அவசியம் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னை புத்தகக் காட்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு, “உண்மையான அறிவைப் பெற நூல்களைப் படிப்பது அவசியம். இன்றைக்கு சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகளை உண்மையாகச் சித்திரித்துப் பரப்புகின்றனர். அதைப் பார்த்து மக்கள் ஏமாந்து போகின்றனர். எது, உண்மை, எது பொய் என்பதை அறிய வேண்டும். ரயில்வே மற்றும் தமிழ்நாடு அரசில் வேலை வாங்கி தருவதாகக் கூறும் நபர்களை நம்பி பெற்றோர்கள், தங்கள் நிலங்களை விற்று லட்சக்கணக்கில் பணத்தைக் கொடுத்து ஏமாறுகின்றனர்.
கேட்கக் கூடிய செய்திகள், பார்க்கக் கூடிய காட்சிகளில் எது உண்மை, எது பொய் என்பதை பிரித்து பார்க்கக் கூடிய ஆற்றல் நூல்களைப் படிப்பதன் மூலம் பெற முடியும். இல்லையென்றால், தொடர்ந்து நம்மை ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள். இந்த உலகத்தில் நம்மால் வாழவே முடியாது. மற்றவர்கள் மனது புண்படும்படியாக பொய்யான செய்திகளைப் பரப்பி வருகின்றனர். அதன்மீது காவல்துறை உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறது.
குறிப்பிட்ட கொள்கைகளில் தீவிரமாக ஈடுபடுவோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர், சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர். அவர்களை காவல் துறை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்று கூறினார்.
**- வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share