ரஷ்யாவிடமிருந்து கோதுமை வாங்க முயற்சி செய்யும் வங்க தேசம்!

politics

கடந்த மாதம் இந்திய உள்ளூர் விலைகளைக் கட்டுப்படுத்த தானியங்களின் ஏற்றுமதியைத் தடை செய்ததை அடுத்து, ரஷ்யாவிடம் கோதுமை வாங்க வங்க தேசம் முயற்சி செய்து வருகிறது. வங்க தேசத்துக்கு கோதுமை ஏற்றுமதியில் மிகப்பெரிய சப்ளையராக இந்தியா இருந்தது. ஆனால், இந்தியாவும் தானியங்களின் ஏற்றுமதியைத் தடை செய்ததால் வங்க தேசம் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
வங்க தேசம் வருடத்துக்கு சுமார் 7 மில்லியன் டன் கோதுமையை இறக்குமதி செய்கிறது. கடந்த ஆண்டு அதில் மூன்றில் இரண்டு பங்கு இந்தியாவிலிருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. வங்க தேச அரசாங்கம் தற்போது உயரும் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்த போராடி வருகிறது. கடந்த மே மாதத்தில் பணவீக்கம் எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது அங்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ஏற்றுமதி தடைக்குப் பிறகு, வங்க தேசம் சர்வதேச டெண்டர்கள் மூலம் தானியப் பொருட்களை வாங்க முயன்றது, ஆனால், அதிக விலை காரணமாக அவை ரத்து செய்யப்பட்டது. இந்தியாவிடமிருந்து கோதுமையை இறக்குமதி செய்து கொண்டிருந்தபோது வங்க தேசம் ஒரு டன்னுக்கு 400 டாலருக்கும் குறைவாகவே செலுத்தியது. ஆனால், இந்தியாவில் தானிய தடைக்குப் பிறகு மற்ற நாடுகளிடமிருந்து வாங்குகையில் ஒரு டன்னுக்கு 460 டாலருக்கும் மேல் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகையால் தற்போது வங்க தேசம், ரஷ்ய நாட்டுடன் கோதுமை இறக்குமதிக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளும் முயற்சிகளை செய்து வருகிறது. இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய வங்க தேசம் வரும் வியாழன் அன்று ரஷ்யாவுடன் ஒப்பந்த சந்திப்பை மேற்கொள்கிறது என்று வங்க தேசத்தின் உணவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் ஆரம்பத்தில் ரஷ்யாவிலிருந்து குறைந்தபட்சம் 200,000 டன் கோதுமையை நாடுவோம் என்றும் தெரிவித்தார்.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *