நெல்லையில் கால்வாய்கள் தூர்வாரப்படுகின்றன : நயினார் நாகேந்திரன்

politics

திருநெல்வேலியில் கால்வாய் தூர்வாரும் பணியை அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் இன்று (ஆகஸ்ட் 29 ) ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் “
தான் அமைச்சராக இருந்த போது தான் நயினார்குளம் கரைக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே 2 கோடி ரூபாய்க்கு தடுப்பணை கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.

தொடர்ந்து எங்களது (அதிமுக) ஆட்சி வராததால் அந்த பணி கிடப்பில் போடப்பட்டது.

சுத்தமல்லி அணைக்கட்டில் இருந்து நயினார்குளம் வரை 23 கிலோமீட்டர் தூரத்திற்கு கால்வாய் தூர்வாரும் பணி நடந்து வருகிறது.

want Parantur Airport

தமிழகம் முழுவதும் பருவ காலங்களில் மழை பெய்தாலே அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கி இருக்கிறது.

திருநெல்வேலி நகர் பகுதியில் அமைந்துள்ள கால்வாய்களில் மழை நேரங்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கி ஊருக்குள் புகுந்துவிடுவதை தடுக்க ரூ.68.21 லட்சம் மதிப்பில் கால்வாய் தூர்வாரப்பட்டு வருகிறது” என்றார்,

மேலும் அவர், “ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழி பேசப்படுகிறது. எந்த மாநிலத்து மக்களுக்கு எந்த மொழியில் பேசினால் புரியுமோ அந்த மொழியில் தான் பேச முடியும்.

பிரதமர் தமிழில் பேசினால் ஏமாற்றுகிறார் என சொல்கிறார்கள். இந்தியை திணிப்போம் என மத்திய அரசு எங்கும் இதுவரை சொல்லவில்லை.இந்தியை வைத்து எதிர்க்கட்சியினர் அரசியல் செய்து வருகின்றனர்” என குறிப்பிட்டார்.

பரந்தூர் விமான நிலையம் பற்றிய கேள்விக்கு, “கட்டமைப்பு வசதிகளை கொண்டு வருவது பாரதிய ஜனதா கட்சி அரசு தான்.

தங்க நாற்கர சாலை திட்டத்தை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கொண்டு வந்துள்ளார். நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் இதுவரை எந்த கட்டமைப்பு மேம்பாட்டு வசதியும் காங்கிரஸ் கட்சி கொண்டு வரவில்லை. பரந்தூர் விமான நிலைய திட்டம் கண்டிப்பாக வேண்டும்” என்று கூறினார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஓபிஎஸ் போல நான் வியாபாரம் செய்யவில்லை: திருச்சியில் எடப்பாடி ஆவேசம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *