Nவைரலாகும் விவேக்கின் ட்வீட்!

Published On:

| By Balaji

மறைந்த நடிகர் விவேக்கிற்கு இணையதளத்திலும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனால் ட்விட்டரில், #விவேக் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

நடிகர் விவேக் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்தவர். ஆன்மீக கருத்துக்கள், விவேகானந்தர், வள்ளலார் குறித்த கருத்துக்களை அவர் பதிவு செய்தது பலரையும் கவர்ந்தது.

அதுபோன்று நடிகர் விவேக் கடந்த மாதம் பதிவிட்ட ட்வீட் ஒன்றும் தற்போது வைரலாகி வருகிறது. “எளிய தன்னலமற்ற தூய வாழ்வும் ஓர் நாள் முடிந்துதான் போகிறது! எனினும் பலர் இறப்பர்; சிலரே, இறப்பிற்குப் பின்னும் இருப்பர்!!” என்று தா.பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து விவேக் பதிவிட்ட ட்வீட்டை பலரும் சேர் செய்து வருகின்றனர்.

இதைப் பகிர்ந்து நீங்களும் இறப்பிற்குப் பின்னும் இருப்பீர்கள் விவேக் சார் என்று இணையவாசிகள் கண்ணீர் வடிக்கின்றனர். அதுபோன்று அவர் நட்ட மரங்கள் மூலம் என்றும் இயற்கையாய் நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பார் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

**-பிரியா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share