ஊழலற்ற நிர்வாகத்துக்கு இதையும் செய்ய வேண்டும்: விஜயகாந்த்

politics

ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது சொத்து விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் தங்கள் பெயரிலும், தங்களுடைய குடும்பத்தினர் மற்றும் பிற நபர்கள் பெயரிலும் உள்ள தங்களுக்கு சொந்தமான அசையாத சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். சொத்து விவரங்களை 2022ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்று நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள விஜயகாந்த், “இதுபோன்ற செயல் வெளிப்படைத் தன்மையையும், ஊழல் இல்லாத நிர்வாகத்தையும், கொண்டு செல்ல வழிவகுக்கும்.

ஐஏஎஸ் அதிகாரிகள் என்பவர்கள் நாட்டை வழிநடத்தும் உயர்ந்த பதவிகளில் பணியாற்றுகிறார்கள், அவர்களே வெளிப்படை தன்மையோடு தங்களை அடையாளபடுத்திக் கொண்டால், அவர்களுக்கு கீழ் செயல்படும் மற்ற அதிகாரிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமையும்.

இந்த நடைமுறையை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், அனைத்து அரசு உயரதிகாரிகளும், தங்களது சொத்து விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட வேண்டும். மேலும், இந்த நடைமுறை பெயரளவிற்கு இல்லாமல் ,இதில் விடா முயற்சியுடன், கண்டிப்புடன் செயல்பட்டால் வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகம் அமைவதில் ஐயம் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.