~விஜய்க்கு ரங்கசாமி மூலம் பாஜக அனுப்பிய மெசேஜ்!

Published On:

| By admin

வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் பரவலாக போட்டியிடும் நிலையில்… நேற்று பிப்ரவரி 4ஆம் தேதி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நடிகர் விஜய்யை திடீரென சந்தித்துப் பேசியிருக்கிறார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் இருக்கும் விஜய்யின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிகிறது. இரு தரப்பிலும் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்டாலும்…இந்த சந்திப்பின் அரசியல் முக்கியத்துவம் குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது.

இரு நாட்களுக்கு முன் சென்னையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை திமுக தரப்பில் தொடர்புக் கொண்டு தேர்தலில் குறிப்பிட்ட சில பகுதிகளில் போட்டியிட வேண்டாம் என அறிவுறுத்தியதாக சர்ச்சைகள் எழுந்தன.
இந்த நிலையில் விஜய்யை பாஜகவின் தூதுவராக ரங்கசாமி சந்தித்திருக்கிறார் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் முதல்வராக இருக்கும் ரங்கசாமி மூலம், பாஜக சில செய்திகளை விஜய்க்கு சொல்லி அனுப்பி இருக்கிறது என்றும், அதற்காகவே விஜய்யை ரங்கசாமி சந்தித்தார் என்றும் தகவல்கள் வருகின்றன.

**வேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share