:தேர்தல் காரணமா?: வானதி

Published On:

| By Balaji

வேளாண் சட்டங்கள் ரத்து செய்வதற்குத் தேர்தல் காரணமல்ல என பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறமாட்டோம் என திட்டவட்டமாக இருந்தது ஒன்றிய அரசு. இதற்கு பாஜக ஆளும் மாநிலங்களைத் தவிர பல்வேறு மாநிலங்களில் இருந்தும் எதிர்ப்புக் கிளம்பின. தமிழகத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.

குறிப்பாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்த சட்டத்திலிருந்து ஒரு கமா கூட மாறப்போவதில்லை. இது காங்கிரஸ் ஆட்சி அல்ல, பாஜக ஆட்சி. யாருக்கும் அஞ்சமாட்டோம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்தின் எதிரொலியாக 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாகப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தந்தி டிவிக்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அளித்த பேட்டியில், தேர்தலுக்காக ரத்து செய்யப்பட்டது என்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஒரு மாநிலத்தில் தேர்தல் வந்துகொண்டுதான் இருக்கிறது. போராடும் விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகப் பிரதமர் இதனை அறிவித்திருக்கலாம். அரசியல் ரீதியாக பல்வேறு கட்சிகள் விவசாயிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தினர். எனவே இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு முழுக்க முழுக்க தேர்தல்தான் காரணம் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ளார்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share