தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் இருப்பு உள்ளிட்ட விவரங்களை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசு இணையதளம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன், படுக்கை வசதிகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் போதுமான அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளது என தமிழக அரசு நேற்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்நிலையில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் வெளியிட்டுள்ள[இணையதளத்தில்]( https://stopcorona.tn.gov.in/beds.php) எந்த மருத்துவமனையில் படுக்கை வசதி உள்ளது என்பதை மக்கள் அறிந்து கொள்ள முடியும்.
இந்த இணையதளத்தில், மாவட்ட வாரியாக கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள படுக்கை வசதிகள், ஆக்சிஜன் உதவியுடன் கூடிய படுக்கைகள், ஆக்சிஜன் அல்லாத படுக்கைகள், ஐசியு, வென்டிலேட்டர் உதவியுடன் உள்ள படுக்கைகள் என அனைத்து தகவலும் உள்ளது. அதில் எத்தனை படுக்கைகள் காலியாக உள்ளது. நோயாளிகள் உள்ள படுக்கைகள் குறித்த விவரங்களும் உள்ளன. அதோடு சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் தொடர்பு எண்களும் உள்ளன. அதைத் தொடர்புகொண்டு மக்கள் தகவல் தெரிந்து கொள்ளலாம். மேலும், கொரோனா வைரஸ் அறிகுறி மற்றும் அவர்களுடைய முந்தைய பயணங்கள் குறித்து 24 மணிநேரமும் மக்களே புகார் அளிக்கலாம்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, முக கவசங்களின் இருப்பு விவரங்கள், N95 முக கவசங்கள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு, கைகளை எவ்வாறு கழுவுவது என்பது குறித்த வீடியோக்களும் இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
**வினிதா**
.�,