Mநிறைவடைந்தது வாக்குப்பதிவு!

politics

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவுபெற்றது.

21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 498 பேரூராட்சிகளில் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. 57 ஆயிரத்துக்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் மந்தமான நிலையே இருந்தது.

காலை 9 மணி நிலவரப்படி 8.21 சதவிகித வாக்குகளும், 11 மணி நிலவரப்படி 21.69 சதவிகித வாக்குகளும், 1 மணிநிலவரப்படி 35.34 சதவிகித வாக்குகளும் பதிவாகி இருந்தன.

பிற்பகல் 3 மணி நிலவரப்படி மாநகராட்சிகளில் 39.13 %, நகராட்சிகளில் 53.49%, பேரூராட்சிகளில் 61.38% வாக்குகளும் என 47.18 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன.

5 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில் அதற்குப் பின் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். அதுபோன்று 5 மணிக்கு முன் வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது.

6 மணியளவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. தேர்தல் முடிவடைந்த நிலையில், பதிவான மொத்த வாக்குகள் குறித்துத் தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.