லாரி மோதி தரைமட்டமான பெரியார் சிலை: நடந்தது என்ன?

politics

விழுப்புரத்தில் லாரி மோதி பெரியார் சிலை இடிந்து விழுந்து தரைமட்டமானது.

விழுப்புரம் மாவட்டத்தில் முக்கியமான சாலைகளில் ஒன்று காமராஜர் சாலை. இங்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை மீது நேற்று இரவு லாரி மோதியதால் இடிந்து விழுந்தது.

புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலை ஒன்றிலிருந்து டயர்களை ஏற்றிக்கொண்டு மகாராஷ்டிரா மாநிலம் புனேவை நோக்கி கண்டெயினர் லாரி புறப்பட்டது. இந்த லாரி வழி தவறி விழுப்புரம் காமராஜர் சாலை வழியாக வந்துள்ளது. வழி மாறி வருவதை அறிந்த டிரைவர் லாரியை திருப்ப முயன்ற போது அந்த கண்டெயினர் லாரி மோதி அங்கிருந்த பெரியார் சிலை சரிந்து விழுந்து முழுவதுமாக சேதமடைந்தது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீ நாதா மற்றும் விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியர் அரிதாஸ் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பெரியார் சிலை உடைந்ததால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்கத் தீவிர பாதுகாப்பும் போடப்பட்டது.

மேலும், பெரியார் சிலை மீது மோதிய லாரியை காவல்நிலையம் எடுத்து சென்ற போலீசார் டிரைவர் மச்சேந்திர ஷ்பலி என்பவரை கைது செய்தனர். இதுகுறித்து தகலவறிந்த திமுகவினர், விழுப்புரம் நகர திமுக செயலாளர் சக்கரை தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுபோன்று திகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் காவல் நிலையம், விழுப்புரம் 4 முனை சந்திப்பிலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

#பெரியார்_சிலை#விழுப்புரம் pic.twitter.com/T3onaGzXoy

— kavi (@Kaviit7P) January 20, 2022

இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

பெரியார் சிலை இடிந்து விழுந்தது குறித்து லாரி டிரைவரிடம் விசாரித்ததில், கூகுள் மேப் உதவியுடன் வாகனத்தை இயக்கி தவறான வழியில் வந்ததும், தவறான வழியில் செல்கிறோம் என்பதை உணர்ந்து திருப்பி வளைக்கும் போது பெரியார் சிலை இடிந்து விழுந்தது தெரியவந்தது. சிலையைச் சேதப்படுத்தியதால் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதுதொடர்பான வீடியோ காட்சியும் தற்போது வெளியாகியுள்ளது.

**-பிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.