திருச்சி சிவா மகன் கைது: அண்ணாமலை கண்டனம்!

politics

மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார்.

திமுகவின் கொள்கைப் பரப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா மகன் சூர்யா. இவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் கடந்த மே 8ஆம் தேதி அக்கட்சியில் இணைந்தார்.பாஜக ஓபிசி பிரிவின் மாநில பொதுச் செயலாளராக சூர்யா உள்ளார்.

கடந்த ஜூன் 11ஆம் தேதி உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பேருந்து ஒன்று சூர்யாவின் காரின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் நடந்த அன்று இதுதொடர்பாக உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள காவல் நிலையத்தில் அளித்த புகாரில் இருதரப்பைச் சமாதானப்படுத்தி போலீசார் அனுப்பியிருக்கின்றனர். அப்போது ஆம்னி பேருந்து சார்பில் உரிய இழப்பீடு வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் காரை சரி செய்வதற்கான பணத்தை உடனடியாக கொடுக்க வேண்டும் என்று அந்த ஆம்னி பேருந்து நிறுவனத்துக்குச் சொந்தமான மற்றொரு பேருந்தை எடுத்துச் சென்று சூர்யா மிரட்டி வருவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து திருச்சி கண்டோன்மென்ட் போலீசார் இன்று சூர்யாவைக் கைது செய்தனர். இதனைக் கண்டித்து 30க்கு மேற்பட்ட பாஜகவினர் காவல் நிலையம் முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சூர்யாவின் கைதுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, பொய்யான வழக்குத் தொடுப்பதில் யார் சிறந்தவர் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

பார்த்துக் கொண்டிருக்கிறோம், பொறுத்துக் கொண்டிருக்கிறோம்,எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம்.

ஜோடனை செய்யப்பட்ட பொய்யான வழக்குகளைத் தொடுப்பது, அரசுக்குப் புதிதல்ல, அதேபோல் இந்த அரசில் பொய்யான வழக்குகளை வாங்குவதும் பாஜக தொண்டனுக்குப் புதிதல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *