rகுரூப் 4 முறைகேடு: சிபிஐ விசாரிக்க உத்தரவு!

Published On:

| By Balaji

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில், சுமார் 16 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வு எழுதினர். இதில் ராமநாதபுரத்தில் குறிப்பிட்ட மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடங்களில் வெற்றி பெற்றது தெரியவந்தது. இது சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.

இந்த விசாரணையில் 2016ஆம் ஆண்டு முதலே குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்தது தெரியவந்தது.

இந்த சூழலில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி, சிபிசிஐடி அமைப்பு விசாரணை நடத்தினால் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் தப்பிக்க வாய்ப்பு உள்ளது.

எனவே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை முழுமையாக நிறைவு பெற்று நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (டிசம்பர் 14) தீர்ப்பு வழங்கியது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி உடனடியாக வழக்கு ஆவணங்கள் அனைத்தையும் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வழக்கு நேர்மையாகவும் விரைவாகவும் விசாரித்து விரைவில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share