ஹெலிகாப்டர் விபத்து: தமிழக பெண் பயிற்சி விமானி உயிரிழப்பு!

politics

தெலங்கானா மாநிலத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் பயிற்சி விமானி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் பிளை ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் விமான நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று ஆந்திரா மாநிலம் குண்டூரில் இருந்து தெலங்கானாவிற்கு பறந்து சென்றது.

இன்று காலை 11 மணியளவில் நல்கொண்டா மாவட்டம் கிருஷ்ணா நதியின் நாகார்ஜூனசாகர் அணைக்கு அருகில் உள்ள கிராமத்தில் பறந்தபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் பெரும் சத்தத்துடன் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த சத்தத்தைக் கேட்டு அச்சமடைந்த, அக்கம்பக்கத்தினர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து, காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், வருவாய்த் துறையினர், மருத்துவ குழுவினர் உடனடியாக மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்களும் கருகிய நிலையில் மீட்கப்பட்டது.

அதில், உயிரிழந்த பெண் பயிற்சி விமானி தமிழ்நாட்டைச் சேர்ந்த மகிமா என்றும், இரண்டு இருக்கைகள் கொண்ட செஸ்னா-152 ஹெலிகாப்டர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் ஏவியேஷன் அகாடமிக்கு சொந்தமானது என்றும் நல்கொண்டா காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி தெரிவித்தார்.

இந்த வழியாக மகிமா பல முறை விமானத்தில் பயிற்சி மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இச்சூழலில் இன்று நடைபெற்ற பயிற்சியில் தான் எதிர்பாராத விதமாக விபத்து நிகழ்ந்துள்ளது. விவசாய நிலங்களுக்கு மேல் செல்லும் உயர் மின்னழுத்த கம்பிகளில் விமானம் உரசியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஹெலிகாப்டர் விபத்தில் தமிழக மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ட்விட்டரில், “தெலங்கானா மாநிலம் நல்கொண்டாவில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு விசாரணை குழு விரைந்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, பயிற்சி விமானியை இழந்துவிட்டோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *