�
மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
மூன்று வேளாண் சட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தார். திமுக ஆட்சிக்கு வந்ததும், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்தச்சூழலில் மூன்று வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாகப் பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். இது முழுக்க முழுக்க விவசாயிகளின் அறப்போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகும். மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும். இதுவே வரலாறு சொல்லும் பாடம். விவசாயிகளின் பக்கம் நின்று போராடியதும் – வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிராகக் கழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதும் நாம் பெருமை கொள்ளத்தக்கதாகும். அறவழிப் போராட்டத்தின் வழியே உரிமைகளை வென்றெடுத்து இந்தியா காந்தியின் மண் என்று விவசாயிகள் உலகிற்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
**-பிரியா**
�,