^டிக் டாக்கில் சீமானுக்கு மிரட்டல்!

Published On:

| By Balaji

P

டிக் டாக் வீடியோ மூலம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மிரட்டல் விடுத்த இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழக இளைஞர்களிடையே டிக் டாக் மோகம் அதிகரித்துள்ளது. முதலில் தமிழ் படங்களின் பாடல்கள், வசனங்கள் ஆகியவற்றை வைத்து டிக் டாக் செய்து வந்தவர்கள் தற்போது அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பிரபலங்களின் பேச்சுகளையும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் 6 பேர் வீடியோ எடுத்து டிக் டாக்கில் வெளியிட்டுள்ளனர். 15 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் உள்ள 6 இளைஞர்களில் நடுவில் இருக்கும் இளைஞர் கத்தியுடன் கானா பாடல் ஒன்றை பாடுவது போன்று காட்சி இடம் பெற்றுள்ளது. சீமானை கூட்டிட்டு வாங்க… என எதுகை மோனையுடன் கூடிய அந்த வீடியோ காட்சியில் சீமானை மிரட்டுவது போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிரவே இதுகுறித்து தாம்பரம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். வீடியோ குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அது எங்குப் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த இளைஞர்கள் யார் என்று விசாரித்ததில் அவர்கள் சென்னை மேற்குத் தாம்பரம் பகுதியைச் சேர்ந்த மணி, சுரேஷ், கிஷோர், அஜித், நிஷாந்த் ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அனைவரையும் கைது செய்த போலீசார், எதற்காக இவ்வாறு பாடினர், சீமான் மீது அவர்களுக்குக் கோபம் ஏன் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share