திருவள்ளுவர், காமராஜர் விருது: பெறுபவர்கள் யார்?

politics

தமிழக அரசு சார்பில் குமரி அனந்தன், மு.மீனாட்சி சுந்தரம் ஆகிய இருவருக்கும் விருது வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும், திருக்குறள் நெறி பரப்பியும் திருவள்ளுவர் சிலை நிறுவுதல் முதலான திருக்குறள் தொடர்பான தொண்டு புரிந்து வருபவர்களுக்கு அய்யன் திருவள்ளுவர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி 2022ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தலைவரும், அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவரும், 2009ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறப்பதற்குக் காரணமானவர்களில் முதன்மையானவர்களுள் ஒருவராகவும், கன்னியாகுமரி மாவட்டம் காப்பியக் காட்டில் தொல்காப்பியர் சிலை நிறுவி, திறக்கப்படுவதற்கு முதன்மையானவர்களுள் ஒருவராக இருந்து பணியாற்றியவருமான, பெங்களூரில் வசிக்கும் திருச்சியைச் சார்ந்த மு. மீனாட்சி சுந்தரத்திற்கு ( 78) வழங்கப்படவுள்ளது.

அதேபோன்று, பெருந்தலைவர் காமராசர் விருது, பெருந்தலைவர் காமராசருடன் இணைந்து பணியாற்றிய தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்விகளைக் கேட்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் ஆகிய பதவிகளை வகித்தவரும், தமிழ் இலக்கியங்களில் புலமையும் பேச்சாற்றலும் மிக்கவராகவும், தமிழ் இலக்கியவாதியாகவும் சிறந்த நூல்களைப் படைத்தவருமான முனைவர் குமரி அனந்தனுக்கு ( 88) வழங்கப்படவுள்ளது.

விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப் பெறுவார்கள் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.