uசமூக வலைதளங்களில் இருந்து விலக முடிவு: மோடி

Published On:

| By Balaji

�சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறுவதற்காகச் சிந்தித்து வருவதாகப் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளின் பிரதமர், அதிபர்களை ஒப்பிடுகையில் பிரதமர் மோடி எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார். செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை என்றாலும்கூட தனது ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளப் பக்கங்கள் வாயிலாகத் தனது கருத்துகளை வெளியிட்டு வருவார்.

தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் தொடர்பான புகைப்படங்களையும் பகிர்வார். ட்விட்டரில் 53.3 மில்லியன் பேர் இவரைப் பின் தொடர்கின்றனர். இன்ஸ்டாகிராமில் 35.2 பேரும், முகநூலில் 44 மில்லியன் பேரும், யூடியூப்பில் 4.5 மில்லியன் பேரும் பின்தொடர்கின்றனர்.

இந்த நிலையில் இந்த ஞாயிறு முதல் முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் என அனைத்து சமூக வலைதள பக்கங்களில் இருந்தும் வெளியேறலாமா என்று சிந்தித்து வருகிறேன். இது குறித்து விரைவில் தெரிவிக்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இவரது அறிவிப்பு, மோடியை பின் தொடர்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு அறிவுரை வழங்கியுள்ள, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமூக வலைதளங்களை அல்லாமல், வெறுப்பைக் கைவிடுங்கள் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதுபோன்று, பிரதமர் சமூக வலைதளங்களை விட்டு வெளியேறக் கூடாது என்பதற்காக ட்விட்டரில் நள்ளிரவு முதல் #nosir என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share