தி காஷ்மீர் ஃபைல்ஸ்: பாஜகவை விமர்சித்த கெஜ்ரிவால்

politics

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்திற்கு மாநிலத்தில் வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி, டெல்லி சட்டசபையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்ஜெட் கூட்டத்தொடரில் வேண்டுகோள் வைத்தனர்.

அதற்கு பதில் அளித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அந்த படத்தை யூடியூப்பில் போடுங்கள், அனைவரும் பார்க்க இலவசமாக கிடைக்கும்’ என கூறியுள்ளார்

இது தொடர்பாக சட்டமன்றத்தில்பேசிய கெஜ்ரிவால், “தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என பா.ஜ.க.வினர் விரும்பினால், திரைப்பட தயாரிப்பாளர் விவேக் அக்னிஹோத்ரியிடம் பேசி அனைவருக்கும் இலவசமாக கிடைக்கும் வகையில், யூடியூப்பில் வெளியிட வேண்டும். ஏன் இதற்கு வரிவிலக்கு வேண்டும் யூடியூப்பில் போட சொல்லுங்கள். எல்லாரும் ஒரே நாளில் பார்த்துவிடுவார்கள்” என்றார்.

மேலும், நாடு முழுவதும் பாஜக கட்சியினர் இப்படத்திற்காக தெருத்தெருவாக சினிமா போஸ்டர் ஒட்டுகிறார்கள். நீங்கள் அரசியலுக்கு வந்தது இதை செய்யவா? வீட்டிற்கு போனால் உங்கள் பிள்ளைகளுக்கு என்ன சொல்வீர்கள்? ஒரு நாட்டை எட்டு வருடங்கள் உங்கள் பிரதமர் மோடி ஆண்ட பிறகும் விவேக் அக்னிஹோத்ரியிடம் நீங்கள் தஞ்சம் அடைவது என்பது, பிரதமர் தனது பதவிக்காலத்தில் எதையும் செய்யவில்லை என்பதையே காட்டுகிறது என்று கூறினார்.

உ.பி. பீகார், உத்தராகண்ட், ஹரியானா இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் இத்திரைப்படத்திற்கு வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.

**-இராமானுஜம்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.