டீ விலை உயர்வு: அடுத்தடுத்து அதிகரிக்கும் விலைவாசி!

politics

விலைவாசி உயர்ந்துவிட்டது என்பதை மளிகைப் பொருட்கள், காய்கறிகள் வாங்கும் குடும்பத்துப் பெண்கள் எளிதில் உணர்ந்துகொள்வார்கள். ஆனால் ஆண்கள் விலை உயர்வை உணரும் அடிப்படைத் தளமாக அமைந்திருப்பது டீ கடைகள்.

தமிழகத்தில் விலைவாசி உயர்ந்துவிட்டது என்பதற்கான தெளிவான அறிகுறியை சீரிய இடைவேளைகளுக்கு மத்தியில் தெளிவாக உணர்த்தி வருவது டீ கடைகள்தான். இந்த வகையில் கடந்த சில வருடங்களாக பத்து ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த டீ, சில நாட்களாக இரண்டு ரூபாய் உணர்ந்து 12 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.

காஸ்ட் ஆஃப் லைவ் எனப்படும் மதிப்பு உயர்ந்திருக்கும் கோவையிலும், திருச்சியிலும், சென்னையிலும் கூட இந்த டீ விலை உயர்வு அமலுக்கு வந்துவிட்டது.

நவம்பர் 16 காலை ஆறு மணிக்கு கோவை கணபதி பகுதியில் ஒரு டீ கடையில் டீகுடிக்க செல்லும்போதுதான், ‘10-11-2021 முதல் டீ ரூபாய் 12- கடுமையான விலைவாசி உயர்வை முன்னிட்டு’ என்ற அறிவிப்பு அச்சடித்து ஒட்டப்பட்டிருந்தது.

இதுகுறித்து அந்த டீ கடை காரரிடம் பேசினோம்.

“என்ன சார் பண்றது… தனியார் பால் விலை அரசுக்கிட்ட கேக்காம உயர்த்திக்கிட்டே இருக்காஙக. சீனி விலை ஏறுது. நாட்டுச் சக்கரை விலை ஏறுது. இதையெல்லாம் விட வணிக பயன்பட்டுக்கான சிலிண்டர் விலையையும் தீபாவளிக்கு முன்னாடி ஏத்திட்டாங்க. இப்ப 19 கிலோ கொண்ட வணிக சிலிண்டருக்கு 266 ரூபாய் விலை தீபாவளிக்கு முன்னாடி ஏத்திட்டாங்க. இதனால வணிக சிலிண்டரோட விலை 2 ஆயிரம் ரூபாயைத் தாண்டிடுச்சு. இதையெல்லாம் நாங்க எப்படி சமாளிக்கறது. அதான் டீ விலைய ரெண்டு ரூபாய் ஏத்திட்டோம். வடை. பஜ்ஜி, போண்டா விலைகளும் ஆட்டோமேட்டிக்கா அதிகரிக்கும்” என்கிறார்.

பெட்ரோல், டீசலில் வரியைக் குறைத்து அதை தீபாவளி பரிசு என்று பெருமிதப்பட்டனர் பாஜக தலைவர்கள். ஆனால் அதே நேரத்தில்தான் வணிக சிலிண்டருக்கான விலையை 266 ரூபாய் அதிகரித்து தீபாவளி ஸ்வீட்டுகள் விலையையும், அதைத் தொடர்ந்து சிங்கிள் டீ விலையையும் ஏற்றிவிட்டனர்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவின் பிற மாநிலங்களிலும் எழுதப்படாத ஒரு விதி இருக்கிறது. டீ விலை உயர்ந்தால் அனைத்து விலையும் அடுத்தடுத்து உயர்த்தப்படும். அந்த வகையில் பத்து ரூபாய் விற்ற டீ இனி 12 ரூபாய் என்பதால் நம் சமூகத்தின் அடுத்தடுத்த பயன்பாட்டு விலைகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *