தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் குறித்து பிரதமர் பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்று மன் கீ பாத் என்ற பெயரில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 30) பிரதமர், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் குறித்தும் தனது பேச்சில் பிரதமர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் பொம்மைகள் செய்யும் மையமாக தஞ்சாவூர் விளங்குவதாகக் குறிப்பிட்ட பிரதமர், “உள்நாட்டு விளையாட்டு பொம்மைகளுக்கு நல்ல பாரம்பரியம் உள்ளது. சில பகுதிகளில் விளையாட்டு பொம்மைகள் அதிகம் தயாரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் தஞ்சாவூர் பொம்மைகள் பிரபலமானவை. கடந்த காலத்தை நினைவூட்டுவதும் எதிர்காலத்தை பிரகாசமாக்குவதும் பொம்மைகள். ஆந்திர பிரதேசத்தில் கொண்டபள்ளி, கர்நாடகாவில் ராமநகராவிலும் பொம்மைகள் செய்யப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் வாரணாசி, அசாமிலும் பொம்மைகள் செய்யப்படுகிறது
விளையாட்டு பொம்மைகள் என்பது குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் இருக்க வேண்டும். பொம்மைகள் உருவாக்குவதை புதிய கல்விக்கொள்கையில் ஒரு பாடத்திட்டமாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் ஏற்றுமதி செய்யப்படவேண்டும்.நமது பழங்கால விளையாட்டு முறைகளை புதிய டிஜிட்டல் கேம்களாக உருவாக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், “ராஜபாளையம், சிப்பிப்பாறை போன்ற இந்திய இனத்தைச் சேர்ந்த நாய்கள் சிறப்பாக பணியாற்றக்கூடியவை. நாட்டு நாய்கள் வலிமையானது, பாசமானது. இந்திய இனத்தைச் சேர்ந்த நாய்களை வீடுகளில் வளர்க்க வேண்டும்” என்றும் பிரதமர் தனது உரையில் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
**எழில்**
�,