தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக் காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியோடு நிறைவடையும் நிலையில், நாடு முழுதும் 17 மாநிலங்களில் நிறைவடையும் மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவியிடங்களுக்கு மார்ச் 26 ஆம் தேதி தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
இன்று (பிப்ரவரி 25) தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணைய தளத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி மார்ச் 6 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கை அமலுக்கு வருகிறது. மார்ச் 13 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். மனுக்கள் பரிசீலனை மார்ச் 16 ஆம் தேதி நடக்கும். மனுக்களை வாபஸ் வாங்க கடைசி நாள் மார்ச் 18 ஆம் தேதி. தேவைப்பட்டால் மார்ச் 26 ஆம் தேதி தேர்தல் நடக்கும். வாக்கு எண்ணிக்கை அன்று மாலை 5மணிக்கு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாடு முழுதும் 17 மாநிலங்களில் 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவடைகிறது.
அதிமுகவைச்சேர்ந்த முத்துக்கருப்பன், ஏ.கே.செல்வராஜ், விஜிலா சத்யானந்த் மற்றும் (அண்மையில் பாஜகவில் சேர்ந்த) சசிகலா புஷ்பா ஆகியோரும், திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா, சிபிஎம் கட்சியை சேர்ந்த டி.கே. ரங்கராஜன் ஆகியோர் பதவிக் காலம் முடியும் தமிழக உறுப்பினர்கள். இவர்களில் 4 பேர் அதிமுகவில் இருந்து சென்றவர்கள். டி.கே.ரங்கராஜன் அதிமுகவின் ஆதரவோடு சென்றவர். திமுக சார்பாக திருச்சி சிவா சென்றார்.
இன்றைய தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு தலா 3 என்ற வகையில் கிடைக்கும் என்பதால் இரு கட்சிகளிலும் ராஜ்ய சபா ரேஸ் சூடுபிடித்துள்ளது.
[அதிமுகவின் ராஜ்யசபா ரேஸ்: முந்தும் மூவர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/politics/2020/02/19/19/rajyasaba-election-admk-race)�,”