மார்ச் 24ஆம் தேதிக்குப் பிறகு தமிழக சட்டப் பேரவை இன்று கூடுகிறது. இன்று புதிய அறிவிப்புகளை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிடவுள்ளார்.
நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் 18ஆம் தேதி தொடங்கியது. அன்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மார்ச் 19ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மார்ச் 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
இந்த நிலையில் துறை ரீதியான மானிய கோரிக்கை விவாதம் ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி மே 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அறிவித்தார்.
அதன்படி இன்று (ஏப்ரல் 6) காலை சட்டப் பேரவை கூடியதும் முதலில் கேள்வி நேரம் எழுப்பப்பட உள்ளது. கேள்வி நேரம் முடிந்த பிறகு நீர்வளத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது.
அப்போது ஆளும்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகிறார். நீர்வளத் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட உள்ளார்.
சொத்து வரி உயர்த்தப்பட்டு அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று சட்டப் பேரவை கூடுகிறது. இந்தச் சூழலில் கேள்வி நேரத்துக்கும், மானியக் கோரிக்கை விவாதத்துக்கும் இடைப்பட்ட நேரம் இல்லாத நேரத்தில் சொத்து வரி உயர்வு தொடர்பாக எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பத் திட்டமிட்டுள்ளன.
**-பிரியா**
Oஇன்று சட்டப் பேரவை கூடுகிறது!
Published On:
| By admin

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel