சட்ட அமைச்சரின் பேச்சை ஆளுநர் கவனிப்பார்- சசிகலா தரப்பு!

politics

அதிமுக கொடியோடு சசிகலா காரில் வந்ததையடுத்து அவர் மீது பிப்ரவரி 4 ஆம் தேதி டிஜிபி அலுவலகத்துக்குச் சென்று அமைச்சர்கள் புகார் கொடுத்தனர். இந்நிலையில் மீண்டும் இன்று (பிப்ரவரி 6) டிஜிபி அலுவலகத்துக்குச் சென்ற அமைச்சர்கள் மீண்டும் சசிகலா மீது புகார் கொடுத்திருக்கிறார்கள்.

இம்முறை, “சசிகலா தமிழகம் வரும்போது சட்டம் ஒழுங்கு கெட்டுப் போக வாய்ப்பிருக்கிறது. கலவரம் செய்ய சதித்திட்டம் தீட்டியிருக்கிறார்கள்” என்று மாநில சட்ட அமைச்சரான சி.வி. சண்முகமே ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.

சட்ட அமைச்சரின் புகார் பற்றி சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் இன்று (பிப்ரவரி 6) ஊடகங்களிடம் பேசியிருக்கிறார்.

“ஏற்கனவே டிஜிபியிடம் அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என்று சசிகலா மீது புகார் கொடுத்தார்கள். ஆனால் இதற்கு சட்ட ரீதியாக தடை கிடையாது என்று நான் சொன்னேன். அவர்கள் நீதிமன்றத்துக்குதான் போயிருக்க வேண்டும். இப்போது மீண்டும் டிஜிபி அலுவலகத்துக்கு சென்று புகார் கூறியுள்ளார்கள்.

விரைவில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வர உள்ளன. அப்போது தேர்தல் ஆணையமே நிர்வாகத்தை எடுத்துக் கொள்ளும். தேர்தல் அறிவிப்பு வரும் முன்பு…. சட்டம் ஒழுங்கு கெட்டுப் போகும் என்று சட்ட அமைச்சரே அச்சத்தை வெளிப்படுத்துகிறார் என்றால்…. இதை ஆளுநர் உற்றுப் பார்த்துவிட்டு ஆட்சியை கலைத்துவிடப் போகிறார்.

ஒரு பெண்மணி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி கிளம்பி வருகிறார். அவரை எதிர்த்து அரசின் சக்தியைத் திரட்டி அதுவும் அமைச்ச்சர்கள் தங்கள் அரசு வாகனங்களில் சென்று புகார் கொடுக்கிறார்கள், பேட்டி கொடுக்கிறார்கள்.

ஆனால் டிடிவி தினகரன், ‘எங்களுடைய பெயரைக் கெடுக்காத அளவுக்கு ஒழுங்காக, மக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல், சமூக இடைவெளியோடு சசிகலாவை வரவேற்கத் தயாராகுங்கள்’என்று தொடர்ந்து சொல்லியிருக்கிறார்.

இந்த நிலையில் சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சீர்கெட்டுப் போகும் என்று சட்ட அமைச்சரே சொல்லும்போது இதை மத்திய அரசும் கவனிக்கும்.

சட்டத்துக்கு உட்பட்டு சசிகலாவை தொண்டர்கள் வரவேற்பார்கள். ஆனால் பதற்றத்துக்கு உள்ளாகி அமைச்சர்கள் இரண்டாவது முறை புகார் கொடுத்திருக்கிறார்கள்” என்று பதிலளித்திருக்கிறார் ராஜா செந்தூர் பாண்டியன்.

**-வேந்தன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0