1971 ஆம் ஆண்டு நடந்த வங்கதேச விடுதலை போரில் இந்தியா வெற்றி பெற்றது. வெற்றி பெற்று 50 ஆண்டுகள் கடந்த நிலையில், 50ஆவது ஆண்டு பொன்விழா தினம் டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் இன்று (டிசம்பர் 12) நடைபெற்றது.
பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா பெற்ற வரலாற்று வெற்றியின் 50ஆவது ஆண்டை நினைவு கூறும் வகையிலும், இந்திய வங்கதேச நட்புறவைக் குறிக்கும் வகையிலும் ஸ்வர்ணியம் விஜய் ப்ர்வ் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியைப் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில் முப்படை தலைமை தளபதியின் திடீர் மரணம் காரணமாக எளிய முறையில் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “முப்படை தலைமை தளபதி மறைவால் நாடே சோகத்தில் மூழ்கி இருக்கும் நிலையில், இவ்விழா எளிய முறையில் கொண்டாடப்படுகிறது. வங்க தேசத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்ட இந்தியா பெரும் பங்காற்றியது. 50ஆண்டுகளில் வங்க தேசம் வளர்ச்சிப் பாதையில் முன்னேற்றம் அடைந்து இருப்பதை கண்டு இந்தியா மகிழ்ச்சி அடைகிறது” என்று கூறினார்.
இந்த பொன் விழாவில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் ஏற்கனவே பேசியிருந்த வீடியோ ஒளிபரப்பப்பட்டது.
வீடியோவில் பேசும் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், இந்த விழாவின் மூலம் இந்திய பாதுகாப்புப் படை வீரர்களின் துணிச்சலுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 1971 ஆம் ஆண்டு நடந்த போரில் இந்தியா பெற்ற வரலாற்று வெற்றியின் 50 ஆண்டுகளை நினைவுகூறும் வகையில் இந்நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. பணியின்போது உயிர் தியாகம் செய்த ஆயுதப்படை வீரர்கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத்துகிறேன்.
டிசம்பர் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை இந்தியாவில் பல நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நமது வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள அமர் ஜவான் ஜோதி வளாகத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுவது பெருமைக்குரியது. நாட்டு மக்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும். நமது படைகளை நினைத்து பெருமை கொள்கிறேன் இந்த வெற்றியை அனைவரும் கொண்டாடுவோம் l என்று பேசியுள்ளார்.
டிசம்பர் 8ஆம் தேதி குன்னூரில் நடந்த விபத்தில் பிபின் ராவத் உயிரிழந்த நிலையில் டிசம்பர் 7ஆம் தேதி இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பிபின் ராவத்தின் கடைசி வீடியோவாகும்.
**-பிரியா**
�,”