மாநில வளர்ச்சிக் கொள்கை குழு: துறைகள் ஒதுக்கீடு!

Published On:

| By Balaji

மாநில வளர்ச்சிக் கொள்கை குழு உறுப்பினர்களுக்கு துறைகளை ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கை குழுவை முதல்வர் ஸ்டாலின் அமைத்து நேற்று முன்தினம் (ஜூன் 6) உத்தரவிட்டார். மின்னம்பலம் வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமான பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன், இந்த குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து நேற்று கொள்கை குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அனைத்து உறுப்பினர்களும் வந்த பிறகு, முதல்வரிடம் ஆலோசனை பெற்று, கொள்கைகளை, திட்டங்களை வகுப்போம். மக்கள் சார்ந்த வளர்ச்சி வேண்டும். இதைதான் முதல்வர் எங்களிடம் கூறினார். அதற்கான வேலைகளைச் செய்வோம். அரசின் கொள்கை படி வழிநடத்துவோம் “ என்றார்.

இந்நிலையில், மாநில வளர்ச்சி கொள்கைக்‌ குழுவினருடன், முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ இன்று ஆலோசனை நடத்தினர். அப்போது, உறுப்பினர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

விவசாய கொள்கை மற்றும் திட்டமிடல் – ஜெயரஞ்சன்

திட்ட ஒருங்கிணைப்பு – ஸ்ரீனிவாசன்

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு – விஜயபாஸ்கர்,

நில உபயோகம் – சுல்தான் அஹ்மத் இஸ்மாயில்

கிராம அபிவிருத்தி மற்றும் மாவட்ட திட்டமிடல் – தீனபந்து,

விவசாய கொள்கை மற்றும் திட்டமிடல் – டி.ஆர்.பி. ராஜா,

தொழில்துறை, எரிசக்தி மற்றும் போக்குவரத்து – மல்லிகா சீனிவாசன்,

சுகாதாரம் மற்றும் சமூக நலன் – அமலோற்பவநாதன், சிவராமன், நர்த்தகி நடராஜ் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

**-பிரியா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share