ஜனநாயகத்தின் கோயில் நாடாளுமன்றம்: பாஜகவுக்கு ஸ்டாலின்

Published On:

| By Balaji

7 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டுமென ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி வன்முறை குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். ஆனால், ஹோலி பண்டிகைக்குப் பிறகுதான் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வேன் என சபாநாயகர் தெரிவித்துவிட்டார். ஆனால், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் கவுரவ் கோகாய், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 7 காங்கிரஸ் எம்.பி.க்களளை பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். சபாநாயகர் மேசையின் அருகிலிருந்து தாள்களை கிழித்து வீசிய குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக விளக்கமும் அளிக்கப்பட்டது.

It is unfortunate to hear that 7MPs have been suspended by the Speaker for trying to bring about a discussion on #DelhiRiots2020

Parliament is often said to be the Temple of Democracy and the BJP Govt will do well to remember this.

Urge Hon’ble Speaker to revoke the suspensions

— M.K.Stalin (@mkstalin) March 6, 2020

இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (மார்ச் 6) தனது ட்விட்டர் பக்கத்தில், “ டெல்லி வன்முறை தொடர்பாக மக்களவையில் விவாதிக்கக் கோரிய காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் 7 பேர் சபாநாயகரால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தி துரதிருஷ்டவசமானது. நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோயில் என்பதை மத்திய பாஜக அரசுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 7 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டுமெனவும் அவர் சபாநாயகருக்கு வலியுறுத்தியுள்ளார்.

**எழில்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share