கடைமடை வரை காவிரி நீர் செல்கிறதா?: முதல்வர் ஆய்வு!

politics

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 11) காலை கல்லணையில் நடைபெறும் புனரமைப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாளை மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு காவிரி நீர் செல்லும் பாதைகளில் தூர்வாரும் பணியை மேற்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதற்காக 65 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. டெல்டா பகுதியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐஏஎஸ் அதிகாரிகள் மேற்பார்வையில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்வார் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்தது.

இதற்காக இன்று (ஜூன் 11) காலை சிறப்பு விமானம் மூலம் சென்னையிலிருந்து திருச்சி சென்றார் முதல்வர் ஸ்டாலின். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்குச் சென்ற அவர், கல்லணை கால்வாய் நவீனப்படுத்துதல் மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதைப் பார்வையிட்டார். அப்போது அவருடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம், முதலை முத்து வாரி, பள்ளியக்ரஹாரம் வெண்ணாற்றில் நடைபெறும் தூர்வாரும் பணிகளையும் ஆய்வு செய்தார்

தொடர்ந்து, மேட்டூர் அணையில் திறக்கப்படும் காவிரி நீர் கடைமடைப் பகுதி வரை தடையின்றி செல்வதற்காகச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இன்றைய நிகழ்ச்சியைத் தொடர்ந்து நாளை மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் சேலம் புறப்பட்டுச் செல்கிறார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.