E15 நாட்களில் குடும்ப அட்டை!

Published On:

| By Balaji

தமிழகத்தில் 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் இன்று நடைபெற்றது. தனது உரையில் ஆளுநர், ‘புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பம் செய்பவர்களுக்கு 15 நாட்களில் வழங்கப்படும்’ என்று அறிவித்துள்ளார்.

குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கப்பட்டால், விண்ணப்பித்த 30 நாட்களில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க வேண்டும். அல்லது குடும்ப அட்டை வழங்கப்படாததற்குக் காரணம் சொல்லவேண்டும். அதையும் மனுதாரருக்கு 60 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.

ஆனால், இந்த காலகட்டத்திற்குள் குடும்ப அட்டை பெற முடியவில்லை என்றும் அதற்கு உரியக் காரணம் சொல்லப்படுவது இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதே சமயத்தில் குடும்ப அட்டை விண்ணப்பித்துப் பெறுவதற்குள் ஆயிரக்கணக்கில் லஞ்சம் கொடுக்க வேண்டி இருப்பதாகவும் புகார் கூறுகின்றனர்.

இந்த சூழலில் சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடரில், உரை நிகழ்த்திய ஆளுநர், குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்த தகுதி வாய்ந்த அனைவருக்கும் 15 நாட்களுக்குள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் விவசாயிகள், மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள், மாநில சுயாட்சி தமிழ் மொழி உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் ஆளுநர் உரையில் இடம் பெற்றிருந்தன.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share