சிவகங்கை மாவட்ட திமுகவில் ஒன்றிய செயலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு எதிராக கடந்த மாதம் திமுக மாசெ பெரியக்கருப்பனின் உருவக் கொடும்பாவியை எரித்து திமுகவினர் போராட்டம் செய்தனர்.
இதன் பின்னணி குறித்து மின்னம்பலம் ஆகஸ்டு 6ஆம் தேதியிட்ட டிஜிட்டல் திண்ணை பகுதியில், [‘ஸ்டாலினிடம் நினைத்ததை முடிக்கும் நிர்வாகி’]( https://minnambalam.com/politics/2020/08/06/17/dmk-leader-stalin-velu-sivagangai-dmk-quesion-protest-periyakaruppan)என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில், தலைமைக்கு நெருக்கமானவரான எ.வ.வேலுவை பிடித்து மாவட்டச் செயலாளர் பெரியகருப்பன் ஒன்றிய செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார். இதுபோல பல மாவட்டத்திலும் அதிமுகவோடு கூட்டணி போட்டுக் கொண்டு மாசெக்கள் செயல்பட்டு வருகிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை எ.வ. வேலு மூலமாக காய் நகர்த்தி தடுத்து வருகிறார்கள். இதன் மூலம் வேலுவுக்கு தமிழகம் முழுதும் ஆதரவாளர்கள் அதிகரித்து வருகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த செய்திக்கு திருவண்ணாமலை திமுக மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எ.வ. வேலு மறுப்பு தெரிவித்துள்ளார். மின்னம்பலத்திடம் இது தொடர்பாக பேசிய எ.வ. வேலு, “மாவட்டச் செயலாளர் என்ற முறையில் தலைமை கொடுக்கும் பணிகளை செய்வதைத் தவிர வேறு பணிகள் எனக்கு இல்லை. வேறு மாவட்ட விவகாரங்களில் தலையிடுவதும் இல்லை. என்னைப் பற்றி சிலர் தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள்” என்று கூறியுள்ளார்.
மேலும், “அதே செய்தியில் 2016 சட்டமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் மேப்பல் சக்தி நின்றபோது அந்தத் தொகுதிக்கு தலைமையிடம் இருந்து அனுப்பப்பட்ட பணம் மாவட்டச் செயலாளர் பெரிய கருப்பனால் கொடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேப்பல் சக்தி சென்னையில் தொழில் செய்து வருகிறவர். தங்கள் தொகுதிக்கான செலவை தாங்களே பார்த்துக் கொள்வது என்ற உறுதிமொழியின் அடிப்படையில்தான் மேப்பல் சக்திக்கு தொகுதியில் நிற்க வாய்ப்பு வழங்கப்பட்டது. எனவே தலைமையால் பணம் எதுவும் அத்தொகுதிக்கு வழங்கப்படவே இல்லை” என்றும் சிவகங்கை மாவட்ட சீனியர்கள் இந்த செய்தி பற்றி விளக்கம் தெரிவித்தார்கள்.
�,