xஒரே நாளில் மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா!

Published On:

| By Balaji

#இன்று ஒரே நாளில் 3 திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினரும், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான சி.வெ.கணேசனுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவனுக்கு இன்று (ஜூலை 19) காலை பாதிப்பு உறுதியானது.

இந்த நிலையில் வேலூர் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் கார்த்திகேயனுக்கு இன்று பிற்பகல் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுபோலவே வேலூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான காந்திக்கு கொரோனா அறிகுறிகள் இருந்துள்ளது. அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதியானது. இதனையடுத்து, காந்தியும் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அமைச்சர்கள் செல்லூர் ராஜு, தங்கமணி, கே.பி.அன்பழகன், நிலோபர் கபில் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே கொரோனா மீதான பயத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

**எழில்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share