Bஐயப்ப விழாவில் அமைச்சர்!

Published On:

| By Balaji

இஸ்லாமியரான அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், ஐயப்ப பக்தர்களுக்கு இருமுடி கட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்று பத்தர்களை வழியனுப்பி வைத்தார்.

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சாதி, மதம்,கடந்து அனைவரிடமும் இணக்கமாக இருப்பவர். இந்த ஆண்டு தொடக்கத்தில், அயோத்தியில், ராமர் கோயில் கட்டுவதற்கு 11,000 ரூபாய் நிதி வழங்கினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இதுவரை 300க்கும் மேற்பட்ட கும்பாபிஷேகங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவன் என்பதால், பாஜகவினர் நிதியுதவி கேட்டனர். நான் என்னால் முடிந்ததைச் செய்தேன் என்றார்.

அந்தவகையில் இன்று ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றார் அமைச்சர் மஸ்தான். செஞ்சி நகரப்பகுதி , எம்.ஜி.ஆர் நகரில் அமைந்துள்ள விநாயகர் கோயிலில் இன்று 25 ஐயப்ப பக்தர்களுக்கு இருமுடி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

The man who is participating in the rituals as a group of devotees proceed to #LordAyyappa temple in #sabarimala is #TamilNadu Minority Affairs Minister K S Masthan, who is a #Muslim by birth. This is the #India we grew up and this is how we want it to remain. pic.twitter.com/cZpeBih1e5

— Sivapriyan E.T.B | சிவப்பிரியன் ஏ.தி.ப (@sivaetb) December 3, 2021

அப்போது அங்கு வந்த அமைச்சர் மஸ்தான், சரண கோசத்துடன் இருமுடி தேங்காயில் நெய் நிரப்பி கொடுத்தார். பின்னர் அரிசி போட்டு இருமுடி பையை அங்கிருந்த பக்தர் ஒருவரிடம் கொடுத்தார். தீபாதாரணையை தொட்டு கும்பிட்ட அவர், 25 பக்தர்களுக்கு தலா 1000 ரூபாய் கொடுத்து வழியனுப்பி வைத்தார்.

அமைச்சரின் மத வேறுபாடற்ற செயல் பக்தர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அதோடு இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

**-பிரியா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share