கல்லூரி செமஸ்டர் தேர்வு தள்ளிவைப்பா?

Published On:

| By Balaji

கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 20ஆம் தேதி நடத்தப்படவிருக்கும் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் தள்ளிபோக வாய்ப்பிருப்பதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து தொற்று அதிகரித்து வருவதால், தமிழ்நாட்டில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்,இன்று(ஜனவரி 5) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி,”தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், முதல்வர் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க ஆலோசனை நடத்தி வருகிறார். கல்வித் துறையை பொறுத்தவரையில் ஜனவரி 20ஆம் தேதி முதல் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதிகரித்து வரும் கொரோனா காரணமாக செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. மாணவர்களுக்கு ஸ்டடி லீவ்(study leave) குறித்து முதல்வர் அறிவிப்பார். அதை பயன்படுத்தி மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும். நல்லமுறையில் நேரடி தேர்வை எழுதும் வகையில் மாணவர்கள் தயாராக வேண்டும். செமஸ்டர் தேர்வு தள்ளிவைப்பது குறித்து முதல்வர் அறிவிப்பில் இடம்பெறும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, இன்று மாலையில் தமிழ்நாடு அரசு ஊரடங்கு குறித்த அறிவிப்பை வெளியிட்டது.

அந்த அறிவிப்பில் கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அரசு , தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகள் தவிர, அனைத்து கல்லூரிகள், தொழில்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20ஆம் தேதிவரை விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share