வீரபாண்டியார் மகனுக்கு இளைஞரணியில் புதிய பொறுப்பு?

politics

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜா சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, தேர்தல் பணிக் குழுச் செயலாளராக மாற்றப்பட்டார். ஏற்காடு ஒன்றிய குழுத் தலைவர் பதவியை அதிமுகவுக்கு விட்டுக்கொடுத்ததாக திமுக கவுன்சிலர் அளித்த புகாரையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. சேலம் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த எஸ்.ஆர். சிவலிங்கத்துக்கு, வீரபாண்டி ராஜா வகித்துவந்த சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி அளிக்கப்பட்டது.

ராஜா நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது ஆதரவாளர்கள் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சந்திரமோகன், தொழில்நுட்ப அணி மாவட்ட பொறுப்பாளர் நந்தகுமார் இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பதவிக்கு அன்புவை நியமித்தார் உதயநிதி. பொருளாதாரத்தில் வளமான இவர், கட்சிக்காக ஏராளமான ரூபாய் செலவு செய்தார். நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு கூட செலவுகளை செய்திருக்கிறார்.

இந்த நிலையில் அன்புவிடம் இருக்கும் இளைஞர் அணி பதவியை வீரபாண்டியாரின் இரண்டாவது மகன் பிரபுவுக்கு வழங்க இருக்கிறது இளைஞரணித் தலைமை. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பலத்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் இளைஞரணி வட்டாரங்களில்.

வீரபாண்டியாரின் மகன் வீரபாண்டி ராஜாவின் மாவட்டச் செயலாளர் பதவியை திமுக தலைவர் ஸ்டாலின் பறித்தார். அவரது மகனான உதயநிதி ஸ்டாலின், வீரபாண்டியாரின் இரண்டாவது மகனுக்கு பதவியை அளிக்கிறார்.

வீரபாண்டி ஆறுமுகத்தின் துணைவியார் லீலாவதி. அதாவது வீரபாண்டியாரின் இரண்டாவது மனைவி. இவர்களது மகன் டாக்டர் பிரபு. சென்னையில் வசித்த வந்த அவர் சேலம் மாவட்ட அரசியலில் தீவிரமாக தலைகாட்ட ஆரம்பித்தார். கட்சி நிர்வாகிகளின் இல்ல நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொண்டு வருகிறார். கடந்த மக்களவைத் தேர்தலின்போது கள்ளக்குறிச்சி தொகுதியை கேட்டு விருப்ப மனு கூட அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

**வணங்காமுடி**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *