அடக்குமுறைக்கு அடிபணிய மாட்டேன்: மௌனம் கலைத்த சசிகலா

Published On:

| By Balaji

பெங்களூருவிலிருந்து சென்னை வந்து கொண்டிருக்கும் சசிகலா அடக்குமுறைக்கு நான் அடிபணியமாட்டேன் என்று கூறி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மௌனம் கலைத்துள்ளார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து விடுதலையான சசிகலா இன்று சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் கிருஷ்ணகிரி கத்திகுப்பத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அன்புக்கு நான் அடிமை, தமிழ் பண்புக்கு நான் அடிமை, கொண்ட கொள்கைக்கு நான் அடிமை, இந்த தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் அடிமை, ஆனால் அடக்குமுறைக்கு நான் என்றும் அடிபணியமாட்டேன் என்று தெரிவித்தார்.

அப்போது தீவிர அரசியலில் ஈடுபடுவீர்களா, என்ற கேள்விக்கு நிச்சயமாக என்று பதிலளித்தார். அதிமுக கொடியை பயன்படுத்தியதற்காக அமைச்சர்கள் புகார் கொடுத்தது தொடர்பான கேள்விக்கு, அது அவர்களின் பயத்தை வெளிப்படுத்துகிறது என்றார்.

ஜெயலலிதா நினைவிடம் எதற்காக மூடப்பட்டது என்று தெரியும் என கூறிய சசிகலா, விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன், அப்போது விரிவாக பேசுகிறேன் என காரில் இருந்தபடியே செய்தியாளர்களிடம் பேசினார்.

அதிமுக பல சோதனைகளை சந்தித்த போதும் பீனிக்ஸ் பறவையைப் போல் மீண்டு வந்துள்ளது. புரட்சித்தலைவி வழிவந்த ஒரு தாய் பிள்ளைகள் ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவதே எனது விருப்பம்” என்றும் குறிப்பிட்டுள்ளார் சசிகலா.

**-பிரியா**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share