அதிமுக முன்னாள் இடைக்கால பொதுச் செயலாளரான சசிகலா இன்று (அக்டோபர் 16) காலை சரியாக 10.35 மணிக்கு தி. நகரிலுள்ள தனது இல்லத்திலிருந்து மெரினா கடற்கரை நோக்கி புறப்பட்டார்.
இன்று சனிக்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணி வரை ராகு காலம் என்பதால் ராகு காலம் முடிந்து சரியாக 10.35க்கு தன் வீட்டிலிருந்து வெளியே வந்து காரில் அமர்ந்தார் சசிகலா.
வீட்டு வாசலில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் அவரது காரின் இருமருங்கிலும் திரண்டு நின்று அவரை வரவேற்றனர். இரண்டு பக்கமும் திரண்ட கூட்டத்தால் மெல்ல மெல்ல நகர்ந்து சென்றது சசிகலாவின் கார். அவரது காருக்கு பின்னால் ஏராளமான கார்கள் அணிவகுத்தன.
மேலும் சசிகலா வீட்டு வாசலில் அவர் புறப்பட்ட பொழுது காருக்கு அருகே அண்ணாவின் படம் பொறிக்கப்பட்ட அதிமுக கொடிகளையே நிர்வாகிகள் ஏந்தியிருந்தனர். சசிகலாவின் காரிலும் அதிமுக கொடியே கட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே சசிகலா வீட்டில் இருந்து நேரடியாக நினைவிடங்கள் அமைந்துள்ள பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று ஜோதிடர்கள் அறிவுறுத்திய படியால்… தி.நகர் சீனிவாசப் பெருமாள்- பத்மாவதி தாயார் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு அதன் பிறகு மெரினாவை நோக்கி பயணமானார் சசிகலா.
சசிகலா வருகையை ஒட்டி மெரினாவில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவகங்கள் இன்று அலங்கரிக்கப்பட்டுள்ளன.
**வேந்தன்**
�,