சீராகும் சசிகலா: மணிப்பால் மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறாரா?

Published On:

| By Balaji

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

நேற்று (ஜனவரி 22) அம்மருத்துவமனை வெளியிட்ட சசிகலாவின் மருத்துவ செய்திக் குறிப்பில்,

“சசிகலாவின் பல்ஸ் நிமிடத்துக்கு 68 இருக்கிறது. இது நார்மலாக இருக்கிறது. மேலும் Respiratory Rate எனப்படும் சுவாச விகிதம் நிமிடத்துக்கு 20 ஆக உள்ளது. ஆக்ஸிஜன் அளவு சசிகலாவுக்கு 97% இருக்கிறது. 5 லிட்டர் அளவு ஆக்ஸிஜன் அவருக்கு கொடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சைக்கு சசிகலாவின் உடல்நிலை முழு ஒத்துழைப்பு தருவதாகவும், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் சசிகலாவை விக்டோரியா மருத்துவமனையில் இருந்து பெங்களூருவின் புகழ் பெற்ற தனியார் மருத்துவமனையான மணிப்பால் மருத்துவமனைக்கு மாற்ற டிடிவி தினகரன் தரப்பில் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால் அவரை மணிப்பால் மருத்தும்வனைக்கு மாற்ற இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என்றும் தகவல்கள் வருகின்றன.

ஆனால், சசிகலாவை மணிப்பால் மருத்துவமனைக்கு மாற்ற தினகரன் தரப்பில் தொடர்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கர்நாடக முதல்வர் எடியூரப்பா, காங்கிரஸ் தலைவர் சித்தராமையா ஆகியோர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது சிகிச்சை பெற்றது மணிப்பால் மருத்துவம்ழ்னையில்தான். அந்த மருத்துவமனைக்கு சசிகலாவை மாற்ற தினகரன் தரப்பில் ஏற்பாடுகள் தீவிரமாக நடப்பதாக அமமுகவினர் தெரிவிக்கிறார்கள்.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share